வாழ்க்கை என்னும் முடிவிலி

 வாழ்க்கையில் எதையோ தேடி போறோம் வாழ்க்கையும் நம்மகிட்ட எதையோ தேடுது யாரோட தேடல் இறுதியில்  நிறைவேறுது  யாரோட / எதோட தேடல் வெற்றிகரமாக முடியுது அப்படிங்கிற புள்ளிதான் வாழ்க்கைய நாம வாழ்ந்தோமா இல்ல வாழ்க்கை நம்மள  வாழ்ந்ததான்னு தெரியும்

 ஆனா இது புரியும்போது / தெரியும்போது மணமிக்க மலர்கள்  நம்மை போர்த்தியிருக்கும்  அதன் வாசனையை கூட நம்மால் நுகர முடியாது 

 அந்த மலர்சரங்களின்  எண்ணிக்கையும்  அதைக் கொண்டுவந்து போர்த்திய  மனிதர்களின்  நம்பிக்கையும்  ஒருவன் வாழ்ந்த  வாழ்க்கையின்  கருப்பொருளை  உணர்த்தும் /விளக்கும்

 ஆம் ,, வாழ்க்கை  ஒரு முடிவிலி தான்  நாம  இந்த உலகத்தை விட்டு  கிலோகிராம்கள்கணக்கில் அப்புறம் படுத்தப்பட்டாலும்  மைக்ரோ கிராம் அளவில்  உலகில் மீதி இருக்கும் உயிருள்ள கிலோகிராம் களின் எண்ண ஓட்டங்களில்   முடிவின்றி வாழ்ந்து கொண்டுதான்  இருப்போம் , நல்ல/ கெட்ட விதமாகவோ....



Comments