வாழ்க்கை என்னும் முடிவிலி
வாழ்க்கையில் எதையோ தேடி போறோம் வாழ்க்கையும் நம்மகிட்ட எதையோ தேடுது யாரோட தேடல் இறுதியில் நிறைவேறுது யாரோட / எதோட தேடல் வெற்றிகரமாக முடியுது அப்படிங்கிற புள்ளிதான் வாழ்க்கைய நாம வாழ்ந்தோமா இல்ல வாழ்க்கை நம்மள வாழ்ந்ததான்னு தெரியும் ஆனா இது புரியும்போது / தெரியும்போது மணமிக்க மலர்கள் நம்மை போர்த்தியிருக்கும் அதன் வாசனையை கூட நம்மால் நுகர முடியாது அந்த மலர்சரங்களின் எண்ணிக்கையும் அதைக் கொண்டுவந்து போர்த்திய மனிதர்களின் நம்பிக்கையும் ஒருவன் வாழ்ந்த வாழ்க்கையின் கருப்பொருளை உணர்த்தும் /விளக்கும் ஆம் ,, வாழ்க்கை ஒரு முடிவிலி தான் நாம இந்த உலகத்தை விட்டு கிலோகிராம்கள்கணக்கில் அப்புறம் படுத்தப்பட்டாலும் மைக்ரோ கிராம் அளவில் உலகில் மீதி இருக்கும் உயிருள்ள கிலோகிராம் களின் எண்ண ஓட்டங்களில் முடிவின்றி வாழ்ந்து கொண்டுதான் இருப்போம் , நல்ல/ கெட்ட விதமாகவோ....